‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் அறிமுகமாகும் ‘என்ன சொல்லப் போகிறாய்’
“குக் வித் கோமாளி” தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம், தமிழக மக்களின் நெஞ்சங்களை, கொள்ளை கொண்ட அஷ்வின், வெள்ளித்திரையில் நாயகனாக தனது பயணத்தை துவங்கவுள்ளார். அவர் முதன்மை நாயகனாக நடிக்கவுள்ள இப்புதிய திரைப்படத்திற்கு “என்ன சொல்லப் போகிறாய்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Trident Arts நிறுவன தயாரிப்பாளர் R.ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். olx, Flipkart, Apollo Hospitals, Sony Music போன்ற பல முன்னனி நிறுவன விளம்பர படங்களையும், புகழ்பெற்ற இணையதொடரான Ctrl Alt Del தொடரை இயக்கிய ஹரிஹரன் A இத்திரைப்படத்தினை இயக்குகிறார்.
நகர பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 2011 ஜூலை 19 அன்று துவங்கவுள்ளது. முன்னமே ஆரம்பிக்கப்படவேண்டிய இப்படப்பிடிப்பு, கோவிட் பொது முடக்க காரணங்களால் தவிர்க்கமுடியாமல் தள்ளிவைக்கப்பட்டது, என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஹரிஹரன் A.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர...
