சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள வள்ளலாரின் ‘மனு முறை கண்ட வாசகம்’ பாடல்!
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழி நடக்கும் இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் 'மனு முறை கண்ட வாசகம்' பாடல்!
"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பிரகடனம் செய்து தமிழகத்தில் இருந்து ஒட்டு மொத்த உலகத்திற்கும் அன்பையும் பண்பையும் போதித்த திரு அருட்பிரகாச வள்ளலார் அருளிய 'மனு முறை கண்ட வாசகம்' பாடலை பிரபல இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ளதோடு காணொலியாகவும் தயாரித்துள்ளார்.
வள்ளலாரின் வழிகாட்டுதல்களை தனது வாழ்க்கை முறையாக பின்பற்றி வரும் சத்யா, அவரது ஸ்டூடியோவில் கடந்த 14 வருடங்களாக அணையா விளக்கை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
'மனு முறை கண்ட வாசகம்' பாடலுக்கு இசை அமைக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் உணர்வு இந்த வருட தைப்பூசத்தின் போது நிறைவேறியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறிய சத்யா, இப்பாட...

