திட்டமிட்டபடி ஜனவரி 31 ‘ டகால்டி’ ரிலீஸ்தயாரிப்பாளர் அறிவிப்பு!
18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம்" டகால்டி ". ஜனவரிமாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.
சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகின் முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், இந்திப் பட உலகின் தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, மற்றும் ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி.
கார்கி பாடல்களையும், பிரபல பாடகர் விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஜாக்கி கலையையும்...
