நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் நாயகனாகும் “யதா ராஜா ததா ப்ரஜா”!
நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் அவர்களுடைய புதிய திரைப்படம் "யதா ராஜா ததா ப்ரஜா" இன்று பூஜையுடன் இனிதே ஆரம்பமானது
'சினிமா பண்டி' புகழ் விகாஸ் மற்றொரு நாயகனாகவும், ஸ்ரஸ்டி வர்மா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். Om Movie Creations & Sri Krishna Movie Creations பேனர்களின் கீழ் ஸ்ரீனிவாஸ் விட்டலா மற்றும் ஹரேஷ் படேல் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஹீரோ ஷர்வானந்த் கிளாப் அடிக்க, சல்மான் கானின் மருமகன் ஆயுஷ் ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் கருணாகுமார் முதல் காட்சியை இயக்கினார்.
இந்த விழாவில் இயக்குநர் - தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் விட்டலா பேசுகையில், "கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது மட்டுமின்றி, ஹரேஷ் படேலுடன் இணைந்து இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன். கதையை முடித்த பிறகு ஒரு முக்கிய கதாபாத்திரத்தைத் தேடும் முயற்சியில் இருந்தோம், அந்த நேரத்தில் ஜானி...
