டிடி நீலகண்டன் துவங்கிய புதிய பயணம்!
பல்லாண்டு காலமாக சின்னத்திரை, பெரிய திரை என எதுவாயினும் பன்முகத் திறமையில் அசத்தி, நட்சத்திர வெளிச்சத்தில் தொடர்ந்து பயணிக்கும் நபராக, அனைவரின் அன்பை பெற்றவராக இருந்து வருகிறார் டிடி நீலகண்டன். அவரது பன்முக திறமைக்கு சான்றாக தற்போது புதியதோர் பயணம் துவங்கியுள்ளார். “என்னு நிண்டே மொய்தீன்” மலையாள படத்திலிருந்து ஆத்மாவை உருக்கும் மெலடி பாடலான “முக்காதே பெண்ணே” பாடலை மிக அழகாக மீளுருவாக்கம் செய்துள்ளார் டிடி.
இது குறித்து டிடி நீலகண்டன் கூறியதாவது...
மிகச்சில காதல் பாடல்களே உணர்வுகளின் அடிநாதத்தை மீட்டுவதாக இருக்கும். நம் உதட்டில் புன்னகை தவழ, நெஞ்சின் அடியாளத்தில் இருந்து உணர்வை மீட்டி கண்ணில் நீர் துளிர்க்க செய்யும். நம் ஆத்மாவுடன் உரையாடலை உண்டாக்கும்.
“முக்காதே பெண்ணே” அந்த வகையில் மிக முக்கியமான பாடல் இது. கேட்பவர்களின் மனதை உருக்கி அவர்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் பாடல். அப்பா...
