மின்னல் வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த “டிடி ரிட்டர்ன்ஸ்” !
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான “டிடி ரிட்டர்ன்ஸ்” படம் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.
ஆர்.கே என்டர்டெயின்மென்ட்டின் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிப்பில், இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கலக்கலான காமெடிப்படமாக வெளிவந்த திரைப்படம் “டிடி ரிட்டர்ன்ஸ்”. திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியானது.
நடிகர் சந்தானம், சுரபி, முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்ஸி விஜயன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
நடிகர் சந்தானம் நடிப்பில் ஹாரர் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு ஒளிப்பதிவ...
