Thursday, September 24

Tag: Dejavu

தரமான வெற்றி படமாக அமைந்த “தேஜாவு”!

தரமான வெற்றி படமாக அமைந்த “தேஜாவு”!

News
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில், அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இப்படம் ஜூலை 22 அன்று வெளியானது. இந்நிலையில் ஊடகங்கள், விமர்சகர்கள், மற்றும் பொது மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற 'தேஜாவு' படத்தின் வெற்றியை இன்று படக்குழுவினர் கொண்டாடினர். இது குறித்து நடிகர் அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். "தேஜாவு" படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி அவர்கள் இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து இதனை வெற்றி படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி....
அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவு!

அருள்நிதி நடிக்கும் ‘தேஜாவு’ படப்பிடிப்பு நிறைவு!

News
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன். 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அருள்நிதி சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்த...
அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் ‘தேஜாவு’!

அருள்நிதி நடிப்பில் மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் ‘தேஜாவு’!

News
தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி, தற்போது 'தேஜாவு' (DEJAVU) எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிஸ்டரி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்முருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ‘தேஜாவு’ படத்தினை அறிமுக இயக்குநரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தினை வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரித்து வருகிறார். அவருடன் இனைந்து PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இனை-தயாரிப்பை மேற்கொள்வதுடன், ஒளிப்பதிவையும் கையாண்டு வருகிறார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த் பணியாற்றி வருகிறார். அருள்நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு, இ...