100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “டிமான்டி காலனி 2”!
"டிமான்டி காலனி 2" திரைப்படம் வெளியான வேகத்தில், ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது !
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 இல், சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான, "டிமான்டி காலனி 2" திரைப்படம், வெளியான வேகத்தில், 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பில், டிஜிட்டல் பிரீமியரில் இப்படம் பல புதிய வரலாற்றைப் படைத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, இதன் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இந்த இரண்டாம் பாகம், ஹாரர் அனுபவத்தின் புதிய கட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிமான்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குக...
