மாணவர்களுக்காக திரைப்படம் தயாரிக்கும் DeSIFMA
நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட திரைப்படத்துறைக்கான பல பயிற்சிகளை அளிக்கும் பல பயிற்சி மையங்கள் கோடம்பாக்கத்தில் தோன்றினாலும் அவற்றில் பல தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயிருக்கின்றன. ஆனால், அப்படி ஒரு பயிற்சி மையமாக இல்லாமல், தமிழ்த் திரைப்பட உலகிற்குப் பல தொழில்நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் உருவாக்கிக் கொடுக்கும் ஒரு மையமாகத் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது “டிஸிஃப்மா - டீசேல்ஸ் சர்வதேச பிலிம் மற்றும் மீடியா அகடாமி’(DESIFMA - Desales International Film & Media Academy).
இந்த திரைப்பட பயிற்சி மையத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்காக இவர்கள் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை சொந்தமாக தயாரிப்பதோடு, அப்படத்தில் மாணவர்களை பணியாற்ற வைத்து, அவர்களுக்கு நேரடி கள பயிற்சி வழங்குவது தான்.
அந்த வகையில், Desales International Film & Med...
