Wednesday, September 23

Tag: DHA DHA 87

தாதா87 படத்தின் பாதிப்பில் உருவானதா சண்டிகர் கரே ஆஷிக்கி இந்திப்படம்? இயக்குநர் விஜயஸ்ரீ யின் பெருந்தன்மை!

News
சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தனது 2019-ம் ஆண்டு படைப்பான தாதா87-ஐ நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன என்று இரண்டு படங்களையும் பார்த்த நண்பர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் இயக்குநர் விஜயஸ்ரீ கூறியுள்ளார். சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87-க்கு பிறகு பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நாயகனாக நடிக்கும் பவுடர் திரைப்படத்தை இயக்கிவுள்ளவரும், வெள்ளி விழா நாயகன் மோகன் நீண்ட காலத்திற்கு பிறகு முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ள ஹரா படத்தின் இயக்குநருமான விஜயஸ்ரீ கூறுகையில், “இந்திய சினிமாவில் முதன்முறையாக பெண் திருநங்கையாக நடித்த படம் என்ற பெருமையும் உலக சினிமா வரலாற்றிலேயே புகை, மதுவுக்கு எதிரான டைட்டிலில் கார்டுடன் பெண்களை அவர்கள் அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றம் என்ற வாசகம் இடம்பெற்ற...
சிங்கப்பூர் ஆடிஷன்ஸ் 2019

சிங்கப்பூர் ஆடிஷன்ஸ் 2019

News
இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டிக்கு இந்த ஆண்டு ஒரு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரை தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்த தாதா 87 திரைப்படம், கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி வெளியானது. டீசர் வெளியானதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வந்த அத்திரைப்படத்தில், சாருஹாசனுக்கு அவர் அமைத்திருந்த பிஜிஎம் பெரிதும் பாராட்டப்பட்டு வந்த நிலையில், பல நல்ல திரைப்பட வாய்ப்புகளையும் அது அவருக்கு பெற்று தந்திருக்கிறது எனலாம். ஜனவரி மாதத்தில், சிங்கப்பூரின் இந்தியன்ராகா அமைப்பினருடன் இணைந்து, லியாண்டர் தனது அடுத்த திரைப்படத்திற்கான குரல் தேடலில் ஈடுபட்டிருந்தார். நூற்றுக்கணக்கான சிங்கப்பூர் வாழ் இசை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சியில் லியாண்டரும் தனது குழுவுடன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு தீபக் எஸ் ஐயர், தலைவர், இந்தியன்ராகா, சிறப்பான ஏற்...