தனுஷுடன் இணையும் மாளவிகா மோகனன் !
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த பிரமாண்ட தயாரிப்பான “D43” யில் தனுஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் இப்படத்தில் தொழில்நுட்ப குழுவிலும், நடிகர்கள் குழுவிலும் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களுக்கு பேரின்ப செய்தியாக, தமிழக இளைஞர்களின் இதய நாயகியாகவும், நடிப்பிலும் அசத்தி வரும் மாளவிகா மோகனன் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, நாயகியாக இணைந்திருக்கிறார்.
இது குறித்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் T. G. தியாகராஜன் கூறியதாவது...
இளம் திறமையாக கலக்கி வரும் நடிகை மாளவிகா மோகனனை, எங்களின் அடுத்த தயாரிப்பான D43 க்காக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வெகு சில நடிகைகளே குடும்ப பாங்கிலான நம் வீட்டு பெண் மற்றும் மாடர்ன் தோற்றம் என இரண்டிலும் அசத்தலாக இருப்பார்கள். அந்த வகையில் மாளவிகா மோகனன் இரண்டு தோற்றங்களிலும் மிக எளிதில் ...
