Thursday, September 17

Tag: Dhanusu Raasi Neyargalae

‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்கு யுஏ சான்றிதழ்!

‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்கு யுஏ சான்றிதழ்!

News
நகைச்சுவை கலந்த காதல் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு, வரும் வெள்ளிக் கிழமையன்று ஏராளமான விருந்து காத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்து, டிசம்பர் 6 முதல் உலகெங்கும் வெளியாகும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் நகைச்சுவை கலந்த முன்னோட்ட காட்சிகளுக்காகவும், ஜிப்ரானின் இனிமையான பாடல்களுக்காகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து பேசிய இயக்குநர் சஞ்சய் பாரதி, "இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்தது குறித்து எங்கள் குழுவே மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. 'தனுசு ராசி நேயர்களே' படம் முழு நீள நகைச்சுவை மட்டுமின்றி, மெலிதான காதல் மற்றும் அனைவருக்குமான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டதாகும். இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை எழ...
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’!

News
காதல் படங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது அதன் நேர்த்தியான இசை. 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசை மூலம் மீண்டும் இதை வெற்றிகரமாக மெய்ப்பித்திருக்கிறரா். ஹரீஷ் கல்யாண் நடித்து, எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. இது குறித்து ஜிப்ரானை வெகுவாகப் புகழ்ந்த இயக்குநர் சஞ்சய் பாரதி, "நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு கனவு நனவானதைப்போல் இருக்கிறது. ஜிப்ரானின் இசை காதல் கதைகளுக்கு நேர்த்தியாக செறிவூட்டி, அவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். தனுசு ராசி நேயர்களே கதைக்கரு என் மனதில் தோன்றியதும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் கைவண்ணம் இதற்கு கண்டிப்பாகத் தேவைப்படும் என்பதை நான் உணர்ந்தேன். இப்போது படத்தின...
தனுசு ராசி நேயர்களே படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் திகங்கனா சூர்யவன்ஷி!

தனுசு ராசி நேயர்களே படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் திகங்கனா சூர்யவன்ஷி!

News
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை தெளிவுபடுத்திய இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராக பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற...
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே!

ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே!

News
ஹரீஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படப்பிடிப்பு தளம் முழுக்க பிரமாண்டம் நிறைந்திருக்கிறது. இந்த படம் அதன் தனித்துவமான தலைப்பினாலும் மற்றும் அழகான நாயகன் ஹரீஷ் கல்யாண் நடிப்பதாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை இப்போதே ஏற்படுத்தியுள்ளது. மிகச்சரியான ஒரு முன் திட்டமிடலுடன் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் கருவை அடிப்படையாக கொண்டு மிக பிரமாண்டமாக உருவாகும் ஒரு பாடலை படம் பிடித்து வருகிறார்கள்.    இது குறித்து இயக்குனர் சஞ்சய் பாரதி கூறும்போது, "தனுசு ராசி நேயர்களே என்ற தலைப்பை குறிக்கும் வகையில் ராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாடலை படத்தில் வைக்க நாங்கள் விரும்பினோம். இந்த படத்தின் ஹீரோ ஜாதகங்களில் மிகுந்த நம்பிக்கை உடையவர், அதன் அடிப்படையில் தான் வாழ்க்கையில் எல்லா தருணங்களில...
பூஜையுடன் துவங்கிய ‘தனுசு ராசி நேயர்களே’…

பூஜையுடன் துவங்கிய ‘தனுசு ராசி நேயர்களே’…

News
தன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ஒவ்வொரு படத்திலும் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி வரும் ஹரீஷ் கல்யாண், ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் முரட்டு சுவாபம் கொண்ட ஒரு இளைஞர் கதாபாத்திரம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஹரீஷ் கல்யாண். அவரது அடுத்த படமான 'தனுசு ராசி நேயர்களே'வும் அதன் தலைப்பு, கதைக்களம் மற்றும் அவரது கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது. சஞ்சய் பாரதி இயக்கும் இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இன்று காலை எளிய சம்பிரதாய பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு கொண்டனர்.   ஹரீஷ் கல்யாண், ரெபா ஜான...