“தனுஷு ராசி நேயர்களே” படத்துக்காக ஜிப்ரான் இசையில் பாடிய அனிருத்!
இன்றைய தமிழ் சினிமா இசை உலகின் இளமை அடையாளமாக வெற்றி நாயகனாக வலம் வருபவர் அனிருத். தொடர் ஹிட் ஆல்பங்களை தந்துவரும் அவர் தன் குரல் மூலமும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இளம் தலைமுறையினர் அவர் குரலினை கொண்டாடி வருகின்றனர். மெலடி, ராப் என எந்தவகை இசைக்கும் ஒத்துப்போகக் கூடிய குரல் அவருடையது. அவர் குரல் உலகம் முழுதும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியதாய் இருக்கிறது. தற்போது அனிருத் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கும் ஹரீஷ் கல்யாணின் “தனுசு ராசி நேயர்களே” படத்தில் ஒரு இளமை துள்ளும் பெப்பி மெலடி ஒன்றை பாடியிருக்கிறார்.
இது பற்றி இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியதாவது...
கொண்டாட்டம், குத்துப்பாடல், காதல் பாடல், சோகப்பாடல் என
எந்த ஒரு சூழலை எடுத்துக்கொண்டாலும் அனிருத் அங்கே பொருந்தக்கூடிய திடகாத்திர குரல் கொண்டவராக இருக்கிறார். அவர் தன் குரலால் பாடல் வரிகளில் மாயாஜாலம் நிகழ்த்தி பாடலை அடுத்த நில...

