தனுசு ராசி நேயர்களே! – ஜோதிடமல்ல… சினிமா பெயர்தான்!
ஒவ்வொரு நபரின் வாழ்விலும் ராசி, நட்சத்திரங்கள் பிரிக்க முடியாத ஒரு காரணியாக இருக்கின்றன. இது ஒரு நம்பிக்கையாகவோ அல்லது வெறுமனே வேடிக்கையாகவோ ஜோதிடத்தின் மூலம் வரும் நாட்கள், வாரங்கள் அல்லது ஆண்டுகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எல்லோரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். குறிப்பாக தமிழில் உள்ள ராசிகளிலேயே 'தனுசு ராசி' தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தை இயக்குகிறார் சஞ்சய் பாரதி.
தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது, "நம்மில் ஒவ்வொருவருமே நம்முடைய ராசியை வைத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம். பத்திரிகைகளிலோ அல்லது காலையில் தொலைக்காட்சியிலோ ஆர்வத்தோடு ராசி பலனை பார்க்கிறோம். ஆத்திகரோ, நாத்தி...
