‘தாராள பிரபு’ தயாரிப்பாளரின் வேண்டுகோள்!
ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மென்ட் பி லிட் சார்பாக பல வெற்றிப் படங்களை விநியோகித்த எங்களுக்கு, நீங்கள் ஆரம்பம் முதலே அளித்து வருகின்ற அன்புக்கும் பேராதரவுக்கும் நன்றி. இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யான், விவேக், தான்யா ஹோப் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற எங்களது முதல் தயாரிப்பான ‘தாராள பிரபு’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
உலகே ஸ்தம்பித்து போயிருக்கின்ற இந்த சோதனையான நேரத்தில், நாம் அனைவருமே பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதிவேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் CoVid-19 பாதிப்பால், நாம் அனைவருமே உரிய பாதுகாப்புடன் வீட்டிலேயே இருப்பதோடு மட்டுமின்றி, தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதையும் தவிர்க்குமாறு இந்த தருணத்தில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
கடின உழைப்பும் தீவிர காதலும் கொண்டு படைக்...

