பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’!
ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!
நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற சில கிரிமினல் சம்பவங்களின் பின்னணியில், எமோஷனல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது 'யாத்ரீகன்'. தனலட்சுமி கோபாலன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் மற்றும் மாளவிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் கூறும்போது, “நாங்கள் திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்தபோது, நல்ல தரமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இயக்குநர் பிரேம் நசீர் 'யாத்ரீகன்' கதையை சொன்னபோது நாங்கள் எதிர்பார...

