Tag: dheena
தும்பாவின் சிறப்பு விருந்தினராக ஜெயம் ரவி!
பெண்புலி தும்பா மற்றும் அதன் காட்டு நண்பர்களை வசீகரிக்க, ஒரு புதிய விருந்தினர் சேர்ந்திருக்கிறார். அவருக்கு காடுகள் தான் இரண்டாவது வீடு, அவரது படங்களான 'பேராண்மை' மற்றும் 'வனமகன்' போன்ற திரைப்படங்களுக்காக அவர் நீண்ட காலமாக அங்கு தங்கி இருக்கிறார். இப்போது அவர் மிகவும் ஜாலியான இந்த 'தும்பா' படத்திலும் இணைந்திருக்கிறார். ஆம்! உயரமான, அழகான ஹீரோ ஜெயம் ரவி, இந்த குழந்தைகளை மையப்படுத்திய படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் சுரேகா நியாபதி கூறும்போது, "இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜெயம் ரவி நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அவருடைய நட்சத்திர அந்தஸ்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்ற ஒப்புக் கொண்...
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் தீனா!
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து புகழ் பெறும் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. அவர்களின் வெற்றி சின்னத்திரையில் இருந்து சாதிக்கும் கனவோடு வருபவர்களுக்கு பெரும் உத்வேகத்தை தருகிறது. அந்த வகையில் சமீபத்திய வரவு 'தீனா'. ஹரிஷ்ராம் இயக்கத்தில் 'கனா' புகழ் தர்ஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோருடன் இணைந்து 'தும்பா' படத்தில் நடித்திருக்கிறார் தீனா.
"இந்த வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை. பயிற்சி பட்டறைக்கு போய் என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப எங்கள் நடிப்பு திறமையைப் பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. ஒன்லைன் காமெடி மற்றும் பஞ்ச் வசனங்களின் தலைமுறையில் வளர்ந்தவன் நான், இந்த படத்தில் எனக்கு அப்படிப்பட்ட விஷயங்கள் நிறைய உள்ளன. என் கதாபாத்திரத்தின் தன்மை எனக்கு நடிக்க ஒரு பெரிய வாய்ப்ப...

