Saturday, November 14

Tag: Dhowlath

நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் “தௌலத்”!

நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் “தௌலத்”!

News
ரைட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக எம்பி முகம்மது அலி தயாரிப்பில், சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான 'தௌலத்' வரும் நவம்பர் 27 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்... "தமிழ் திரையுலகில் இதுவரை 20'க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகித்து வெற்றி கண்ட 'ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம்' தற்போது "தௌலத்" திரைப்படத்தை தயாரித்துள்ளது. இண்டெர்நேஷனல் தரத்தில் முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தபடத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களால் கணிக்க முடியாத அளவிற்கு பல்வேறு திருப்பங்களுடன் மிரட்டலாக அமைந்துள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத அளவில் கதை நகரும்படி இப்படத்தின் படத்தொகுப்பு வேகத்தை கூட்டியுள்ளது. திரைக்கதையின் விறுவிறுபிற்கேற்...