நம்பிக்கை தரும் அறிமுக இயக்குநர் தீரன்!
சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்கியிருந்தார்.
'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு நடிகர் சத்யராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் கதாநாயகனாக நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிறைந்த படமாக ரசிகர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இந்தப் படத்துக்கு ஒரு விசேஷ அடையாளம் உண்டு என்று சொல்லலாம். 2021ஆம் ஆண்டு 31 ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை வரவேற்கும் விதமாக 2022 ஆம் ஆண்டு முதல் தேதியிலிருந்தும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்துக்கு கிடைத்த வரவேற்பையொட்டி தெலுங்கு, மற்றும் இந்தியிலும் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகர்கள...
