இயக்குநர் சுசிகணேசனின் பாலிவுட் படைப்பின் டைட்டில் வெளியானது!
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தரமான படைப்புகளைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுசிகணேசன். தமிழில் இவர் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ “ திருட்டுப்பயலே "உட்பட ஏராளமான படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.
தற்போது வெற்றிப் படமான ‘திருட்டுப்பயலே - 2’ படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் இந்தி டைட்டில் வெளியானது. படத்துக்கு ‘தில் ஹே கிரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் இதன் அர்த்தம், இதயத்தின் நிறம் சாம்பல் .இந்த உலகத்தில் வெள்ளை மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். கறுப்பு மனம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். கிரே இதயம் என்றால் வெள்ளை, கறுப்பு என இரண்டும் கலந்தது. அப்படி ஒரு கிரே இதயம் படைத்த மனிதர்களின் கதையைத் தனித்துவமாக இதில் சொல்லியுள்ளார்கள். இந்தப் படம் தமிழில் வெளியான ‘திருட்டுப்பயலே 2 "படத்தின் நேரடி ர...
