‘லெவன்’ படத்திற்காக டி.இமான் இசையில் ஆண்ட்ரியா பாடி, ஆடி அசத்தும் ‘தமுகு’ பாடல்!
தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவான பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!
*Song Link: https://youtu.be/1zoMIAVxQbk*
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்'. இப்படத்திற்காக 'தமுகு' எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாடலை பற்றி பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், "பரபரப்பான கிரைம் திரில்லரான 'லெவன்' படத்தின் கதைக்கேற்றவாறு இப...




