போனி கபூர் வெளியிடும் ‘டைனோசர்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டர்!
தமிழ்ப் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் , ட்ரெய்லர், மோஷன் போஸ்டர் போன்றவற்றை தமிழ்த் திரையுலகின் நட்சத்திரங்கள் வெளியிடுவதுதான் இதுவரையிலான வழக்கம். ஆனால் ஒரு தமிழ்ப்படத்தின் மோஷன் போஸ்டரை இந்திய சினிமாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நட்சத்திரம் ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வெளியிடுவது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகும். அந்தப் படம்தான் 'டைனோசர்ஸ்'.
இப்படத்தை புதுமுக இயக்குநர் M R.மாதவன் இயக்குகிறார்.
இவர் இயக்குநர் சுராஜின் உதவி இயக்குநர், மேலும் பல இயக்குநர்களிடம் கதை விவாதங்களில், திரைக்கதை அமைப்பில் கலந்து திரை அனுபவம் பெற்றவர்.அவர் இயக்கியுள்ள படம்தான் இந்த 'டைனோசர்ஸ்'. இது ஒரு கேங்ஸ்டர் கதை.
இதுவரை சிறுத்தை, புலி, சிங்கம் என்ற வார்த்தைகள்தான் படப்பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் 'டைனோசர்ஸ்' என்று ...
