“‘ஜெய்பீம்’ போல ‘கெவி’ படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” _இயக்குநர் அமீர்
“விருதுக்கான படங்களை திரையரங்குகளுக்கு கொண்டுவந்து போட்டி போடக்கூடாது” ; வெளிப்படையாகப் பேசி அதிர வைத்த இயக்குநர் அமீர்!
ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அறிமுக நாயகன் ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன், உமர் பரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலசுப்பிரமணியன் ஜி இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதியுள்ளார். ஒரு சிறப்பு பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சுற்றி, அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையப்பட...








