
‘தa பியூச்சர்ஸ்’ – புதுமையான கூட்டு முயற்சி !
ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ - நமது பாரம்பரிய கலை, இசை, கலாச்சார வடிவங்களை பாதுகாத்து பராமரிக்கும் ஒரு முற்றிலும் புதுமையான கூட்டு முயற்சி
கலாச்சாரம் என்பது தொடர்ச்சியானது; கலாச்சாரம் என்பது கால அடைவுகளுக்கு அப்பாற்பட்டது; அத்தகைய ஒரு பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும் பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது.
இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் உலகின் மிக முக்கியமான இசை கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட எம்ஐடியின் புகழ்பெற்ற ஊடக ஆய்வகத்தின் இசையமைப்பாளர் - இசை விஞ்ஞானி ட...