56 நாட்களில் முடிந்த ‘நிஷப்தம்’ படத்தின் படப்பிடிப்பு!
56 நாட்களிலேயே நிஷப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டதாக ஹேமந்த் மதுகர் தெரிவிக்கிறார்!
பெரிதும் எதிர்பார்க்கப்படும் தெலுங்கு மற்றும் தமிழ் த்ரில்லரான நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியருக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், முழு படமும் வாஷிங்டன் சியாட்டில் நகர பின்னணியில் செட் எதுவும் அமைக்கப்படாமல் 56 நாட்களில் படமாக்கப்பட்டதாக இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறியுள்ளார்.
“முழு படமுமே அமெரிக்கா, சியாட்டலின் புறநகரில் உள்ள உண்மையான இடங்களில் எந்த செட்டும் அமைக்கப்படாமல் படமாக்கப்பட்டது மற்றும் படத்தில் காட்டப்பட்டுள்ள சில போலீஸ்காரர்கள் கூட படத்தின் படப்பிடிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான போலீஸ்காரர்கள் தான். மேலும் முழு படத்தையும் ஒரே நேரத்தில் 56 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படமாக்கினோம் என பகி...
