நிசப்தம் திரைப்பட அனுபவம் குறித்து இயக்குநர் ஹேமந்த் மதுர்கர்!
நிசப்தம் படத்துக்காக ஒரு ஆதரவற்றோர் இல்லம் குறித்த கனவு ஒரு பள்ளியின் மூலம் எவ்வாறு நிறைவேறியது என்பதை இயக்குநர் ஹேமந்த் மதுர்கர் பகிர்ந்து கொள்கிறார்.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய வெளியீடான நிசப்தம் திரைப்படம் தனித்துவமான கதையையும் இதற்கு முன் பார்த்திராத நடிகர் குழுவையும் கொண்டுள்ளது. இந்த படத்தில் ஆதரவற்றோர் இல்லம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது, அது அனுஷ்காவின் குழந்தைப் பருவம் மற்றும் அவர் அங்கு எப்படி வளர்ந்தார் உள்ளிட்ட விஷயங்களுக்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. இவை அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் ஹேமந்த மதுர்கர் அந்த ஆதரவற்ற இல்லத்தை தேடியது எத்தனை சவாலாக இருந்தது என்பதையும், பின்னர் அந்த கனவு ஒரு பள்ளியின் மூலம் எவ்வாறு நிறைவேறியது என்பதையும் பகிர்கிறார்.
இது குறித்து இயக்குநர் கூறும்போது, “எனக்கு ஒரு பழங்கால ஆதரவற்றோர் இல்லம் தேவைப்பட்டது ஆனால் துரதிர்ஷ்டவசம...
