இரட்டை விருது பெற்ற “ராட்சசன்”!
விஷ்ணு விஷால் அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் என்று அனைவரது பராட்டையும் பெற்று, கோலிவுட் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகமே திரும்பி பார்க்கும் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காக உருவாகி வரும் இப்படம் தற்போது உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது. லாஸ் ஏஞசலஸ் நகரில் நடைப்பெற்ற திரைப்பட போட்டி விருது விழாவில் (LATCHA) சிறந்த ஆக்ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது.
Axess Film Factory தயாரிப்பாளர் G. டில்லி பாபு “ராட்சசன்” படம் படைத்திருக்கும் இந்த சாதனை பற்றி தெரிவித்ததாவது....
“ராட்சசன்” படம் செய்திருக்கும் இந்தச் சாதனை மொத்தப் படக்குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாராட்டு படத்தில் பங்கேற்று உழைத்த அத்தன...
