வசந்தபாலனின் துணை இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் ஹாரர் திரைப்படம்!
இயக்குநர் வசந்தபாலனின் துணை இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் வித்தியாசமான ஹாரர் திரைப்படம்!
விண்டோ பாய்ஸ் எனும் நிறுவனம் சார்பாக R.சோமசுந்தரம் எனும் அறிமுக தயாரிப்பாளர் முதன்முறையாக ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகிக் கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கலந்த ஹாரர் படமொன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் போன்ற சிறந்த படங்களிலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களிலும் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் பழனிவேல் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரபுதேவா நடித்த குலேபகாவலி மற்றும் ஜோதிகா நடித்த ஜாக்பாட் படங்களின் ஒளிப்பதிவாளரான R.S.ஆனந்தகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணீயாற்றிக் கொண்டிருக்கிறார்
விஜய் ராஜன் கலை இய...
