மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி!
மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி!
பிரமாண்டமாக தயாராகும் ஆக்சன் திரைப்படம் !
“100” திரைப்படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை தந்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற “மாறா” திரைப்படத்தினை தயாரித்த Pramod Films தயாரிப்பாளர் சுருதி நல்லாப்பா இப்படத்தினை தயாரிக்கிறார்.
நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படம் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பபை மையப்படுத்தி ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகிறது. பல புதுமையான ஆக்சன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி மேற்கொண்டு தயாராகி வருகிறார் நடிகர் அதர்வா. படத்தின் பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் கொண்டிருப்பதால் “மாறா” ...


