Sunday, September 20

Tag: director seenuramasamy

சீனு ராமசாமி எழுதி இயக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை”!

சீனு ராமசாமி எழுதி இயக்கும் “கோழிப்பண்ணை செல்லதுரை”!

News
. "ஜோ" படத்தின் வெற்றியை தொடர்ந்து "VISION CINEMA HOUSE" டாக்டர் டி.அருளானந்து அவர்கள் தயாரிக்கும் "கோழிப்பண்ணை செல்லதுரை" திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி,பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது! தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் "கோழிப்பண்ணை செல்லதுரை" திரைப்படம் கிராமத்து மண்சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல், காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகும் அதிரடி உணர்ச்சி வாழ்வியல் திரைப்படம். முக்கிய கதாபாத்திரத்தில் "யோகி" பாபு கதையின் நாயகனாக அறிமுகமாகும் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச் செந்தூர் ஶ்ரீ ராம் (அறிமுகம்) சத்யா (அறிமுக...
முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்!

முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்!

News
தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் சி வி குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்கத்தில் முன்னணி இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகும் புதிய திரைப்படம்! தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர்-இயக்குநர் சி வி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். முதல் காட்சியை சி வி குமார் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று இனிதே தொடங்கியது. எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. இப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகராக அறிமுகம் ஆக...
சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் சீனு ராமசாமி!

சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் சீனு ராமசாமி!

News
எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி "தென்மேற்கு பருவகாற்று", "நீர்பறவை", "தர்மதுரை", "கண்ணே கலைமானே" என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து வெளியிட்டனர். தங்களது இரண்டாவது படமான "ரெட் ரம்" திரைப்படத்தில் அஷோக் செல்வன் நடிப்பில் விக்ரம் ஸ்ரீதரன் இயக்குகிறார். ரெட் ரம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. டைம் லைன் சினிமாஸின் முன்றாவது தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்குகிறார். இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது....