Monday, September 28

Tag: Director V.J. Gopinath

ஜீவி படத்துக்கு ‘U’ சான்றிதழ்!

ஜீவி படத்துக்கு ‘U’ சான்றிதழ்!

News
'மைண்ட் கேம்ஸ்' அடிப்படையிலான த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப்படங்களுக்கு எப்போதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். சமீபத்தில் "ஜீவி" படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் அத்தகைய தாக்கத்தை உருவாக்கியது. அதன் ஒவ்வொரு கூறுகளும் இது எப்படிப்பட்ட ஒரு படம் என்பதை அறியும் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு 'U' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இயக்குனர் வி.ஜே.கோபிநாத் இது குறித்து கூறும்போது, "ஒரு அறிமுக இயக்குனரான எனக்கு இது ஒரு...