Saturday, October 3

Tag: directorNaman Nitesh

பாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா…

பாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா…

News
தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த நடிகை பாவனா ராவ், ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இவர் நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர். இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் இவர் ஹிந்தியில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதீன் முகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பை பாஸ் ரோட் என்ற படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதன் மூலம் ஹி...