Tuesday, September 29

Tag: DISCOVERY BOOK PALACE

டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைத்த 50 நாள் புத்தகக் காட்சி!

டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைத்த 50 நாள் புத்தகக் காட்சி!

News
சென்னையின் முக்கியமான இலக்கிய அடையாளங்களின் ஒன்றான, டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிலையம், 50 நாள் புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்டுள்ள புத்தக விற்பனை மற்றும் அதுசார்ந்த சோர்விலிருந்து வாசகர்களை மீட்டெடுக்கும் விதமாகவும், 2021ஆம் ஆண்டை நம்பிக்கையுடன் துவங்குவதற்கான ஒரு வரவேற்ப்பு விழாவாகவும் இந்த புத்தகக் காட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர், பதிப்பாளர் வேடியப்பன் தெரிவித்துள்ளார் . இந்த சிறப்புப் புத்தகக் காட்சியை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். தன் எழுத்தால் உயர்ந்தவர், காலம்காலமாக பிரிக்க முடியாத வறுமையும் புலமையும் என்ற வகைப்பாட்டை, உடைத்து கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் தமிழின் நம்பிக்கைக்குரிய தலைமகன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இந்த புத்தகக் காட்சியை திறந்து வைப்பது மிகவும் பொருத்தமானது. புத்தகக் காட்சி...