Wednesday, November 18

Tag: doctor maran

சர்வதேச திரைப்பட விழாக்களில் டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்!

சர்வதேச திரைப்பட விழாக்களில் டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்!

News
டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பூடான் நாட்டிலுள்ள பரோ (Paro) என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் (Druk International Film Festival) சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது, ‘பச்சை விளக்கு’ திரைப்படம். இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் (Tripvill International Film Festival) சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது. நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் (Aphrodite) திரைப்பட விழாவிலும் இறுதித் தேர்விலும் (Finalist), மேலும் லண்டனில் CKF சர்வதேச திரைப்பட விழா, இத்தாலியில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச ...