Thursday, September 3

Tag: DON

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும்  “டான்” பாடல்கள்!

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் “டான்” பாடல்கள்!

News
பல ஆண்டுகளாக, ஒரு படத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது திரைத்துறையில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால், அது படத்தின் 50% வெற்றிக்கு முன்னதாகவே உத்தரவாதம் அளித்து விடுகிறது, ஏனெனில் அது படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய கட்டத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கிற அம்சமாகும். மேலும், அனிருத் ரவிச்சந்தர் போன்ற இளைஞர்களின் அடையாளமாக விளங்கும் இசையமைப்பாளரின் உணர்வு பூர்வமான இசையில், ஆல்பம் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி. சிவகார்த்திகேயனுடனான அவரது முந்தைய ஆல்பங்கள் திரையுலகில் மறுக்கமுடியாத சார்ட்பஸ்டர்களாக பாராட்டப்பட்ட நிலையில், இருவரின் கூட்டணியில் வரவிருக்கும் திரைப்படமான ‘டான்’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்துள்ளது. முதல் சிங்கிள் பாடலான 'ஜலபுலஜங்கு', கல்லூரி மாணவர்களிடம் திருவிழா கொண்டாட்டமாக மாறியது, அதைத்...
“டான்” படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்!

“டான்” படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்!

News
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவீஸ்! லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவான படம் “டான்” இப்படம் மே 13 அன்று வெளியாக உள்ளதாக முன்னரே அறிவிப்பு வெளியானது. தற்போது டான் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. இன்று நடந்த இந்நிகழ்வின் போது நடிகரும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின், லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாகி திரு.G.K.M.தமிழ் குமரன், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் திரு.கலையரசு, ரெட் ஜெயன்ட் மூவீஸ் விநியோக நிர...
லைகா புரடக்‌சன்ஸ் வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

லைகா புரடக்‌சன்ஸ் வழங்கும் சிவகார்த்திகேயனின் “டான்” !

News
நடிகர் சிவர்கார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “டாக்டர் மற்றும் அயலான்” திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் வெளிவரவுள்ள உச்சகட்ட எதிர்பார்ப்பு மிக்க படங்களின் பட்டியலில் மிக மேன்மையான இடத்தை இப்படங்கள் பெற்றிருக்கிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்திகேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார். லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார். லைகா குழும தலைவர், தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் கூறியதாவது... தமிழின் மிக முக்கிய நடிகர், ...