Tuesday, September 22

Tag: dop sugumar

நான்கு நிமிட காட்சியை ஒரே ஷாட்டில் படமாக்கிய ஒளிப்பதிவாளர் சுகுமார்!

News
தமிழ்சினிமாவில் தங்களது  ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்ற ஒளிப்பதிவாளர் சுகுமார்.    தற்போது மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களை முடித்துவிட்டு தெலுங்கு படம் ஒன்றுக்காக ஆந்திரா பக்கம் கிளம்பத் தயாராகி வருகிறார். இந்தநிலையில் மாமனிதன், கும்கி-2 படங்கள் மட்டுமல்லாது பாலா இயக்கிய வர்மா படத்தில் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சுகுமார்.“யானை என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. அந்தவகையில் கும்கி படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக கும்கி-2 படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது.. இரண்டும் வெவ்வே...