Wednesday, October 28

Tag: Dr R. Balaji

எஸ்.பி.பி.க்கென்று புதிய பாடலை உருவாக்கிய டாக்டர் ஆர்.பாலாஜி!

எஸ்.பி.பி.க்கென்று புதிய பாடலை உருவாக்கிய டாக்டர் ஆர்.பாலாஜி!

News
பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்த இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்படி எண்ணிலடங்காத ரசிகர்களை தன் வசப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம் இப்பொழுது நம்மோடு இல்லை என்றாலும், அவர் பாடிய பாடல் மூலம் நம்முடன் வாழ்ந்து வருகிறார். ஜூன் 4 ஆம் தேதி இவரது பிறந்தநாள். கடந்த ஆண்டு இவரது பிறந்தநாளுக்கு பல பிரபலங்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், எஸ் பி பி யின் தீவிர ரசிகரும், டாக்டருமான ஆர்.பாலாஜி, சிறப்பு பாடல...