பாடல் எழுதி விஜய் சேதுபதியிடம் பாராட்டு பெற்ற இணை இயக்குநர் விஜய் முத்துப்பாண்டி!
சினிமாவில் யாருக்கு எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.பொழுது விடிவதற்குள் ஒருவரைப்புகழ் பெற்றவர்களாக மாற்றி விடக் கூடியது சினிமா.
அந்த வகையில் ஒரு பாடல் எழுதி அந்தப் பாடல் வைரலாகி அதன் வெற்றி வீச்சால் இன்று யார் இவர்? என்று கேட்கும் அளவிற்குப் பிரபலமாகிவிட்டார் விஜய் முத்துப்பாண்டி.
இவர் எஸ். ஏ .சந்திரசேகர் சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக வாழ்வைத் தொடங்கியவர்.
அப்போது அங்கே மூத்த உதவி இயக்குநர்களாக இருந்த பொன்ராம் ,எம் ராஜேஷ் ஆகியோருடன் நல்ல நட்பு கொண்டு பழகியவர்.
பொன்ராம் தனியே இயக்குநர் ஆனதும் இவர் ,அவரிடம் இணை இயக்குநர் ஆகிவிட்டார்.
எஸ் .ஏ. சந்திரசேகரிடம் பணிபுரிந்த போதே வசனம், பாடல் வரிகளை எழுதும் பரிச்சயம் விஜய் முத்துப்பாண்டிக்கு இருந்திருக்கிறது. அவ்வப்போது எழுதிக் காட்டிய போது எஸ். ஏ. சி .பாராட்டி ஊக்கப்படுத்தி இருக்கிறார்.அந்த ஊக்கம் தந்த உந்துதலில...
