Sunday, November 29

Tag: Dulquer Salmaan

தீபாவளிக்கு திரைக்கு வரும் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம்!

தீபாவளிக்கு திரைக்கு வரும் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம்!

News
துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு வெளியாகிறது! இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் பன்மொழி நடிகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ’லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்களும், திரையுலக பிரியர்களும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் திரையரங்க வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வைரலான ஹிட் மெல்லிசை பாடலான ’ஸ்ரீமதி காரு’ பாடல் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. முதலில் இந்தப் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தீபாவளி வார இறுதிய...
அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்!

அதிர வைக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் டைட்டில் ட்ராக்!

News
துல்கர் , வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக்! பல மொழி ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான், ஒரு சாதாரண மனிதரான 'லக்கி பாஸ்கரி'ன் அசாதாரண கதையுடன் இந்த முறை வருகிறார். ஜூலை 28ம் தேதி நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. 1980களின் பிற்பகுதிக்கும் 1990களின் முற்பகுதிக்கும் நம்மை அழைத்து செல்லும் இந்த இசை ரசிகர்களுக்கு போதை தருகிறது என்றால் மிகையில்லை. இசைக்கருவிகளின் பயன்பாடு மற்றும் அனைத்திற்கும் மேலாக, பழம்பெரும் பாடகி உஷா உதுப்பின் குரல் இந்த ட்ராக்கை ஒரு ராக்கிங் நாஸ்டால்ஜிக்காக மாற்றி இருக்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், 1980களின் இண்டி-ராக்கை தற்போதைய தலைமுறை உணர்வுகளுடன் இணைத்து இந்த பாடலை உருவாக்...
செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!

News
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது! பல மொழி நடிகரும் இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்களில் ஒருவருமான துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்துள்ளார். 1980 களின் பிற்பகுதியிலிருந்து 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கும் ஒரு திரைப்படமான 'லக்கி பாஸ்கர்'- ஐ பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி மிக பிரமாண்டமாக எழுதி இயக்குகியுள்ளார். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. மேலும், படத்திற்காக தயாரிப்பாளர்கள் எண்பதுகளின் மும்பையை (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) ஹைதராபாத்தில் சில விலையுயர்ந்த மற்றும் விரிவான செட்களுடன் மீண்ட...
துல்கர் சல்மான் நடிக்கும் ’லக்கி பாஸ்கர்’!

துல்கர் சல்மான் நடிக்கும் ’லக்கி பாஸ்கர்’!

News
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில், ’லக்கி பாஸ்கர்’ படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த முதல் பாடலான ‘ஸ்ரீமதி காரு’ வெளியாகியுள்ளது! 'மகாநடி’, ‘சீதா ராமன்’ போன்ற படங்களின் வெற்றிக்காக நடிகர் துல்கர் சல்மான் பான் இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இப்பொழுது அவருடைய நடிப்பில் ‘லக்கி பாஸ்கர்’ படம் வெளியாக உள்ளது. பிளாக்பஸ்டர் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான ’லக்கி பாஸ்கர்’ படத்தின் டீசரில் துல்கர் சல்மானின் வசீகரிக்கும் தோற்றம் மற்றும் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது, படத்தில் இருந்து தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமை...
துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’!

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’!

News
துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது! துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது, அவர் ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கதையான 'லக்கி பாஸ்கர்' படம் மூலம் வசீகரிக்க வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது...
துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

News
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு துவக்கம்! இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். அவரது திறமை மற்றும் தனித்துவமான படங்கள் தேர்வு மூலம் இன்று அவர் பெரும் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார். 'சீதா ராமம்' போன்ற கிளாசிக் மற்றும் 'கிங் ஆஃப் கொத்தா' போன்ற கேங்ஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இப்போது தெலுங்கில் திறமையான இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் 'லக்கி பாஸ்கர்' என்ற தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சமீப வருடங...
புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான்!

புதிய படத்தில் இணையும் ராணா – துல்கர் சல்மான்!

News
ராணா டகுபதி, துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் காந்தா என்ற புதிய படத்தை இயக்குனர் செல்வமனி செல்வராஜ் இயக்குகிறார். ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபாரெர் ஃபிலிம்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகன் ராணா மற்றும் தெலுங்கு மொழியில் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.  பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் தலைப்பு, துல்கர் சல்மானின் பிறந்தநாளை ஒட்டி புதிய போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படத்தை இணைந்து தயாரிப்பதுடன் துல்கர் சல்மான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த ப...
ஓணம் விருந்தாக வரும் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்!

ஓணம் விருந்தாக வரும் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்!

News
ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணியின் முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்அப்பைப் போலவே, இப்படத்தில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் DQ-வின் முரட்டுத்தனமான தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ் நாட்டில் காரைக்கு...
துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’!

துல்கர் சல்மான் நடிக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’!

News
பத்மாவத், அந்தாதுன், பாக் மில்கா பாக் போன்ற மிகப்பெரிய மற்றும் கதையம்சம் கொண்ட படங்கள் மூலம் இந்திய சினிமாவை மறுவரையறை செய்த இந்தியாவின் பிரீமியர் கண்டெண்ட் ஸ்டுடியோ வையாகாம் 18 ஸ்டுடியோஸ், தேவதாசா (தெலுங்கு) மற்றும் கோடத்தி சமக்ஷம் பாலன் வகீல் (மலையாளம்) ஆகிய சினிமாக்கள் மூலம் பிராந்திய மொழி சினிமாவில் அடியெடுத்து வைத்தது. இப்போது வையாகாம் 18 மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் துல்கர் சல்மானின் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ மூலம் தமிழ் சினிமாவில் தங்களின் வருகையை அறிவிக்கிறது.  வையாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி அஜித் அந்தரே கூறும்போது, “ஒரு திரைப்பட தயாரிப்பாளராக, மொழிகளை தாண்டி பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய கதைகளைச் சொல்வதை விட திருப்திகரமான எதுவும் இல்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வழங்கப்படும் கதைகளை கண்டு நான் எப்போதுமே ஈர்க்கப்பட்டிருக்கிறேன். ஆண்ட...