Friday, October 23

Tag: Edge

‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்!

‘எட்ஜ்’ பாடலுக்கு பெரும் வரவேற்பு – ஸ்ருதிஹாசன் உற்சாகம்!

News
கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான 'எட்ஜ்' நேற்று (ஆகஸ்ட் 8) வெளியானது. இந்தப் பாடல் 2021-ல் ஸ்ருதிஹாசன் வெளியிடவுள்ள ஆல்பத்தின் அங்கமாக உள்ள பாடலாகும். 'எட்ஜ்' பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இது ஸ்ருதிஹாசனின் மற்றொரு பரிமாணம். இதற்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதெல்லாம் எண்ணாமல் வெளியிட்டார் ஸ்ருதிஹாசன். ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு அவரை திக்குமுக்காடச் செய்திருக்கிறது என்று சொல்லலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், பிரின்ஸ் மகேஷ் பாபு, ராணா, நாக சைத்தன்யா, விஷ்ணு விஷால், ...