“நண்பர் எஸ்.பி.பி. நலமுடன் திரும்பி வருவார்” – எடிட்டர் மோகன்!
எஸ். பி .பி யின் உடல் நலம் குறித்து பிரபல தயாரிப்பாளரும், டைரக்டர் மோகன்ராஜா, நடிகர் ஜெயம் ரவி அப்பாவுமான எடிட்டர் மோகன் கூறியுள்ளதாவது...
"எஸ் .பி .பாலசுப்ரமணியமும் நானும் நீண்ட நாளைய நண்பர்கள்.அவருடைய இந்த நிலை என்னை மிகவும் வருந்தச் செய்துள்ளது.அவருக்கும் எங்களுக்குமான உறவு 1975 முதல் இன்றுவரை நிலைத்திருக்கிறது.எங்களது நட்பு குடும்ப உறவாக வளர்ந்திருக்கிறது.
என்னுடைய எல்லா மொழி மாற்றுப் படங்களுக்கும் என்னுடைய நேர்முகப் படங்களுக்கும் அவர் பாடல்கள் பாடியிருக்கிறார்.அவர் பாடல்கள் இல்லாத படங்களே கிடையாது.என்னுடைய மொழிமாற்றுப் படங்களுக்கு நாயகனுக்கு அவர்தான் வசனங்கள் பேசுவார் .எல்லா படங்களும் வெற்றி அடைந்துள்ளன. அதோடு என்னுடைய படங்களின் பூஜைகளை அவருடைய கோதண்டபாணி தியேட்டரில்தான் வைத்துக் கொள்வேன். அதில் எனக்கு ஒரு ஆனந்தம். நிச்சயமாக எனக்கு வெற்றி கிடைக்கும்.
இதுவரையில் அப்படி எல்...

