இணையத்தை கலக்கும் எமர்ஜென்சி வெப் சீரிஸ்!
ஒரு படைப்பு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்கும் போது நிச்சயமாக அது பேசப்படும். அப்படி அதிகம் மக்களால் கொண்டாடப்பட்ட வெப்சீரிஸ் தான் எமெர்ஜென்சி. எமெர்ஜென்சி என்ற வார்த்தை இன்றைய சூழலில் மிக முக்கியமானது, ஹெல்த் சம்பந்தமாக நமக்கு எந்த எமெர்ஜென்சி சூழலும் வரக்கூடாது என்ற அவெர்னெஸோடு தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ்
“புட் சட்னி” என்ற யூடியூப் தளத்தில் மாபெரும் வெற்றியைக் கண்டது. மொத்தம் எட்டு எபிசோட்-களை கொண்ட இந்த சீரிஸ் ட்ரெண்டிங்கில் இருந்தது, மிக முக்கியமாக முதல் நான்கு எபிசோட்கள் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது
சிதம்பரம் மணிவண்ணன் இயக்கத்தில் நல்ல நோக்கத்தோடு வெளியான இந்த சீரிஸில் மாபியா படத்தில் நடித்திருந்த 'புட் சட்னி' தீப்ஷீ ,கோமாளி படம் மூலம் அடையாளம் பெற்ற ஆர்.ஜே.ஆனந்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் முக்கியமான கேரக்டரில் கலைமாமண...
