Friday, October 23

Tag: Endravadhu Oru Naal

உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகும் ‘என்றாவது ஒரு நாள்’!

உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகும் ‘என்றாவது ஒரு நாள்’!

News
வெற்றிமாறன் வெளியிட்டுள்ள 'என்றாவது ஒரு நாள்' ஃபர்ஸ்ட் லுக்! உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது!! சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும் விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி. பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் ...