‘எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் பிரவீர் ஷெட்டி!
மொழித் தடைகளைத் தாண்டிய அனைத்து மக்களும் கொண்டாடும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘எங்கஜ்மெண்ட்’(Engagement) திரைப்படத்தின் மூலம் பல திறமைகள் கொண்ட நடிகர் பிரவீர் ஷெட்டி தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
‘சைரன்’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரவீர் ஷெட்டி, தனது சிறப்பான நடிப்புத் திறமையால் அபரிமிதமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். தற்போது பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ’எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி சினிமாவின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் பான் இந்தியா நாயகனாக உருவெடுக்க இருக்கிறார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்ட திரைப்படமாக உருவாக இருக்கும் ’எங்கஜ்மெண்ட்’ திரைப்படம் தற்போது ப்ரீ புரொடக்ஷன்ஸ் கட்டத்தில் உள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் முழுமையாக முடிவடைந்து ஆகஸ்ட் முதல் வாரத்...
