Friday, October 23

Tag: Eswari Rao

“ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

“ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

News
SHREE JAI PRODUCTIONS வழங்கும். இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், "ஆலகாலம்" பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! SHREE JAI PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது “ஆலகாலம்” திரைப்படம். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா ? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே இப்படம். இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமானதாக இருப்பதுடன், வித்தியாசமான திரை அனுபவமாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. மேலும் பார்வையாளர்களிடம் நல்ல பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. ...

விஜய் ஆண்டனி நடிக்கும் “காக்கி” படத்தின் உரிமைகளை கைப்பற்றிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்

News
இயக்குனர் விஜய் மில்டன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், அனுபவம் வாயந்த இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் "காக்கி" திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது. விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்'கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் "காக்கி", ஒரு பன்முகத் திறமைகள் கொண்ட பல நட்சத்திரக் கலவை. ஜீன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் ஷிமோகா , பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் நிறைவடைந்திருக்கிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர்...