பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத் தொடர் சிறப்பு திரையிடல் !
பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. ZEE5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே. நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி இணையத் தொடர் பெண்ணடிமைத்தனத்தை அழுத்தமாக பேசி, பெண் கல்வி மீது புதிய ஒளி பாய்ச்சியது. திரைத்துறை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரிடமும் பெரும் பாரட்டுக்களை குவித்தது. இத்தொடரை பள்ளிகளில் திரையிட வேண்டும் என...
