ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா
ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா
ஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட பிரலபங்கள் அப்படத்தை எதாவது முறையில் அங்கீகரிக்கும் போதுதான். தற்போது புதிதாக தயாராகியுள்ள வணிகன் என்ற படத்தின் ஆடியோ உரிமைதை வாங்கி அப்படம் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.
FESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் வணிகன்.
நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம்வந்து கொண்டிருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சார்லி, புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா ...
