சென்னை உலக சினிமா விழா வெற்றிகரமாக நிறைவு!
செப்டம்பர் 1 2 3 ஆகிய மூன்று தேதிகளில் சென்னை உலக சினிமா விழா தினமும் ஆறு காட்சிகளோடு சிறப்பாக நடைபெற்று நிறைவுற்றது.
6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு திரையிடப்பட்ட குறும்படங்கள் திரைப்படங்கள் ஆகியவற்றை கண்டுகளித்தார்கள்.
26 குறும்படம் மற்றும் திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன.
இலங்கை இயக்குனர் பிரசன்ன விதாநாயகா இவ்விழாவில் கலந்து கொண்டார்.
அவரது காடி என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.
எம் சரவணன் இயக்கத்தில் உருவான நாடு என்ற திரைப்படம் வேர்ல்ட் பிரிமியர் என்ற அந்தஸ்தில் துவக்க நாள் திரைப்படமாக திரையிடப்பட்டது.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஆர் எஸ் சிவாஜி அவர்கள் கலந்து கொண்டார்.
விழா மேடையில் அவரது நடிப்பை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்விழாவில் கலந்து கொண்டவர் அடுத்த நாள் இயற்கை எய்தியது அனைவரையு...
