“ஃபைண்டர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !
Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடகங்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
நடிகர் சார்லி பேசியதாவது..,
இந்த நிகழ்ச்சி எனது மனதிற்கு மிகவும் பெருக்கமானது, அண்ணன் வைரமுத்து அவர்கள் இந்த விழாவிற்கு தலைமை தாங்குவது எங்கள் குழு அனைவருக்கும் பெருமை, இந்தப் படத்தில் பெரிய கதாநாயகன்கள் இல்லை இந்த படத்தில் கதைதான் நாயகன் , வைரமுத்து அவர்கள் இந்தப் படத்தில் பாடல் எழுத ஒப்புக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. இந்த படத்திற்காக கடின உழைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் வினோத். வைரமுத்து அவர்கள்...
