ஆச்சரியப்படுத்தும் ‘தி சேஸ்’ ஃபர்ஸ்ட் லுக்!
ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது மிகவும் முக்கியம். அது தான் ஒவ்வொரு படத்தின் கதைகளம், நடிகர்களின் லுக் ஆகியவற்றை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும். ஆனால், இதில் ஒரு சில ஃபர்ஸ்ட் லுக் தான் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும். அப்படியொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக அமைந்துள்ளது 'தி சேஸ்'
கார்த்தி ராஜு இயக்கத்தில் ரைசா வில்சன், ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், குழந்தை மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குறைந்த நடிகர்களை வைத்துக் கொண்டு பலம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவினருடன் 'தி சேஸ்' உருவாகியுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ராஜ்சேகர் வர்மா தயாரித்துள்ளார். இந்நிறுவனத்துக்காக கார்த்திக் ராஜு இயக்கி வரும் 'சூர்ப்பனகை' திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி ...
